சிறுநீரக கற்கள் அறிகுறி மற்றும் நீங்க வழிமுறைகள் | Tamizhan Goals

சிறுநீரக கற்கள்

சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரையிலும் எளிதில் சிக்கி பாதிக்கப்பட்டு வரும் பிரச்சணை சிறுநீரக கற்கள் தான். தன்னை அறியாமல் தன்னாலேயே தாக்கப்படும் நோயாக மாறிவிட்டது.

சிறுநீரக கற்கள் என்றால் என்ன?

சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி என்பது வேதி படிகங்களாக உறுவாகி மனிதனை கொடிய வலிக்கு உட்படுத்துகிறது. சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரகங்களில் உருவாகின்றன. எனினும், அவை உங்கள் சிறுநீர் பாதை வழியாக வளர்ந்து பின்வரும் உடல் உறுப்புகளை தாக்கலாம்.

  • சிறுநீரகங்கள்
  • சிறுநீர்க்குழாய்கள்
  • சிறுநீர்ப்பை
  • சிறுநீர் வடிகுழாயிருப்பதால்
  • சிறுநீரக கற்கள் மிகவும் வலிமையான, வலியை உண்டாக்கும் மருத்துவ பிரச்சணை ஆகும். இந்த சிறுநீரக கற்களை உருவாக்கும் காரணிகள் பல வகையில் மாறுபடுகின்றன.

    கற்கள் என்ன செய்யும்?

    விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகின்ற கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    பரிசோதனைகள்

    சிறுநீரகக்கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் போதும். சிலருக்கு ஐவிபி (Intravenous Pyelogram) எனும் பரிசோதனை தேவைப்படும். கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா எனப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். இதைக் கொண்டு கல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம்.

    சிறுநீரக கற்கள் வகைகள்

    அனைத்து சிறுநீரக கற்கள் ஒரே படிகங்களால் உருவாக்கப்படவில்லை. பல்வேறு வகைகளில், பல்வேறு காரணங்களால் உறுவாக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

    1 - கால்சியம்

    கால்சியம் கற்கள் மிகவும் பொதுவானவை. பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலேட் (கால்சியம் பாஸ்பேட் அல்லது மெல்லட் இருப்பினும்) கொண்ட பொருட்களை உண்னுவதால் உருவாகின்றன. ஆக்ஸலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த வகை கல்லை வளர்க்கும் ஆபத்தை குறைக்கலாம். உயர் ஆக்ஸலேட் உணவுகள் பின்வருமாறு:

  • உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • வேர்கடலை
  • சாக்லேட்
  • பீட்ரூட்
  • கீரை
  • 2. யூரிக் அமிலம்

    இந்த வகை சிறுநீரக கல் பெண்களை விட ஆண்களிடமே அதிகமாக காணப்படுகிறது. கீல்வாதம் கொண்டவர்கள் அல்லது கீமோதெரபி சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த வகை கல் உருவாகலாம். சிறுநீர் மிகவும் அமிலமாக மாறும்போது இந்த வகை கல் உருவாகிறது. பியூரின்களில் நிறைந்த ஒரு உணவு சிறுநீரின் அமில அளவை அதிகரிக்கலாம். மீன், மட்டி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றில் உள்ள புரதங்கள் இதனை தடுக்க உதவுகிறது.

    3. ஸ்டூரூவைட்

    இந்த வகை கற்கள், கல்லீரல் சிறுநீர்த் தொற்று நோய்த்தொற்றுகளாக உருவாகிறது. பெண்களிடமே பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த கற்கள் பெரியதாக இருக்கும், எனவே சிறுநீர் கழிப்பதற்கு தடங்கல் ஏற்படுத்தலாம்.

    4. சிஸ்டைன்

    சிஸ்டின் வகை கற்கள் மிகவும் அரிதானவை. மரபணு கோளாறு சிஸ்டினுரியா கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இவை வருகிறது. இந்த வகையிலான கல் (சிஸ்டைன் - உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு அமிலம்) சிறுநீரகத்திலிருந்து சிறுநீரில் இருந்து கசிந்து வழிகிறது.

    சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் காரணிகள்

    சிறுநீரக கற்களை உறுவாக்கும் மிகப்பெரிய ஆபத்து காரணியாக கருதப்படுதவது.. நாளொன்றுக்கு ஒரு லிட்டர் அளவுக்கு குறைவாக சிறுநீர் கழிப்பது தான் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சிறுநீரகக் கற்கள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக காணப்படுகிறது. இருப்பினும், சிறுநீரகம் கற்கள் பெரும்பாலும் 20 மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே அதிகளவில் காணப்படுகிறது.

    பல்வேறு காரணிகள் சிறுநீரக கற்கள் வளரலாம் என தெரிவித்த போதிலும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்களிடமே இந்த சிறுநீரகக் கற்கள் அதிகம் இருப்பதாகக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நீரிழிவு நோயாளிகள் மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (NIDDK) சம்மேளத்தின் கருத்தின் படி பாலியல் ரீதியான உறவுகளும் இந்த சிறுநீரக கற்களை உண்டாக்கும் என தெரிவிக்கின்றது. இந்த வகையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் சிறுநீரக கற்கள் உண்டாகும் எனவும் தெரிகிறது.

    பிற காரணிகளாலும் இந்த சிறுநீரக கற்கள் உருவாகலாம்...

  • உடல் வறட்சி
  • உடல் பருமன்
  • புரதம், உப்பு, அல்லது குளுக்கோஸின் அதிக அளவு கொண்ட உணவு
  • ஹைபர்ப்பேரதிராய்டு நிலை
  • இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை
  • கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கும் அழற்சி குடல் நோய்கள்
  • நீரிழிவு மருந்துகள், ஆண்டிசைசர் மருந்துகள் மற்றும் கால்சியம் அடிப்படையிலான அமிலங்கள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது, போன்ற இதர பிரச்சணைகளும் சிறுநீறக கற்களை உண்டாக்கும்.


  • சிறுநீர் கற்கள் உள்ளவர்கள் சாப்பிட கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் :

    ரணகள்ளி

    ரணகள்ளி செடியின் இலையை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கறைந்து சிறுநீர் வழியே வந்து விடும்

    ஆணை நெறிஞ்சி

    ஆணை நெறிஞ்சி இலையை ஒரு கொத்தாக கையில் எடுத்து அதை தண்ணீரில் நனைத்து பின் அந்த நீரை காலையில் ஒரு டம்ளர் குடித்து வர சிறுநீர் கற்கள் அகன்றுவிடும்.

    தண்ணீர்

    நாள் ஒன்றுக்கு தினசரி 8 டம்ளர் தண்ணீர் குடித்து வரவும். அதிகமான நீர் உட்கொண்டாலே சிறுநீரக கற்கள் கறைந்து வெளிவந்துவிடும்.

    காரட், பாகற்காய், இளநீர்:

    இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழம், எலுமிச்சை:

    இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

    அன்னாச்சி பழம்:

    இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

    கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்:

    கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

    உப்பு:

    உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    எதை சாப்பிடக் கூடாது?

    காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான், இந்த எச்சரிக்கை! சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

    Ramesh Sudalai

    1 Comments

    Thanks for your comments. Please be visit and given positive review on our site.

    Post a Comment

    Thanks for your comments. Please be visit and given positive review on our site.

    Previous Post Next Post