TAMIZHAN GOALS
“ ஊரடங்கை மதித்திடு, உயிரினை காத்திடு ”
நீண்ட பாதைகளாக மாறிவிடுமோ என்ற எண்ணம் கொள்ளாதே!!
உன்னை காப்பாற்றும் ஒரு வழி இது தான் என்பதை மறவாதே!!
உலகம் வெளிச்சத்திலேயே இருள் பெருகி கனக்கிறது.
கர்ப்பத்தில் இருப்பது போல் இன்று கூரைக்குள் நீ அடங்கி இரு!
அறநூல்கள் சொல்லாத தவத்தை உன் அறைகள் சொல்கின்றன.
“இருப்பவர்கள் கதவை மூடிய படியும்,
இல்லாதவர்கள் வயிற்றைப் பார்த்தப்படியும்”.
நிவாரணம் உன்னை வந்த படியால் உன் வறுமையும் வாடிப்போகும்.
அவ்வண்ணம் நிவாரண உதவி
உனக்கு கிட்டாத வகையில்
நோன்பு போல் இருந்து உன் உயிருக்கும், இவ்வுலகத்தை எண்ணியும்
ஒரு வரத்தை கேள் அந்த கடவுளிடம்
தடுப்பு சுவராக உன் வேண்டுதல் அமையட்டும் இவ்வுலக மக்களுக்கு..
தனித்திரு!! விழித்திரு!! விலகியே இரு!!
என்பதே உன் அச்சம் போக்கும் மந்திரமாகும். . .
- Ramesh Sudalai
Superb Sir
ReplyDeleteSuper poem sir
ReplyDeletePost a Comment
Thanks for your comments. Please be visit and given positive review on our site.